பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி…
தென்னிந்திய மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே
கபிஸ்தலத்தில் உள்ள காமராஜ் நகரில் உதயாஸ், எபினேஷன், குணா நினைவாக மேதகு வே. பிரபாகரன் கபடி கழகம் 11 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.
இதில் சென்னை,நாகை, தஞ்சாவூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட தென்னிந்திய மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன.
விறுவிறுப்பான நடந்த போட்டியில் வீரமாஞ்சேரி அணியினர் முதல் பரிசையும், சென்னை அணியினர் இரண்டாவது பரிசையும்,திருப்புறம்பியம் அணியினர் மூன்றாவது பரிசையும் ,கபிஸ்தலம் அணியினர் நான்காவது பரிசையும் தட்டி சென்றனர்.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் பயிற்சியாளர்கள் , காமராஜ் நகர் கிராம மக்கள், மேதகு வே. பிரபாகரன் கபடி கழகம் காமராஜர் நகர் கபிஸ்தலம் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.