எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மன நிவேதா எம் முருகன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எம்.பி நபாஸ் கனி நாகப்பட்டினம் எம் எல் ஏ முகமது ஷா நவாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
தமிழகம் மொழிக்கான போராட்டங்களை எப்படி நடத்தியது என்பதை ஒன்றிய அரசுக்கு தெரியுமா தெரியாதா, வஃக்ப் வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்க பார்க்கிறது என பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லை வாசலில் புதிதாக கட்டப்பட்ட A R.சாதிக் தீனியாத் பெண்கள் மதரஸா திறப்பு விழா நடைபெற்றது.இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பளராக புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜான் ரீசெட் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ் கனி கலந்து கொண்டு செய்தியாளரிடம் பேசுகையில்.
தமிழகத்தில் கடந்த காலங்களில் மொழிக்கான போராட்டங்களை தமிழகம் எப்படி நடத்தியது என்பதை ஒன்றே அரசுக்கு தெரியுமா தெரியாதா
தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருந்து வருகிறது. தமிழ் ஆங்கிலம் மொழியினை கற்று வருகின்றனர் இங்கு எந்த மொழியில் கற்பதற்கு எதிர்ப்பு கிடையாது ஆனால் மொழி திணிப்பை ஏற்க முடியாது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநில அரசுக்கு கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க முடியாது என சொல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.இது தொடர்பாக மாநில கல்வித்துறை அமைச்சார் டெல்லியில் உள்ள ஒன்றிய கல்வி அமைச்சரை பார்க சென்றபோது புதிய கல்வி கொள்கை திட்டத்தில் கையெப்பம் இட்டால் மட்டுமே நிதி வழங்கமுடியும் என கூறுவது மிகப்பெரிய ஆணவப்போக்கு இதனைஒன்றிய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழகம் மற்ற மாநிலங்களை விட அதிகமான வரி செலுத்தக்கூடிய நிலையில் நியாயமாக கிடைக்கக்கூடிய பணத்தை கொடுக்காமல் மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறது.
சிறுபாண்மையினரின் கல்வி கற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது.பல்வேறு உதவி தொகையை தடுத்து நிறுத்தக்கூடிய அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மையினரை பொருளாதார ரீதியாக ஒடுக்க வேண்டும் என்பதற்காக வஃக்ப் திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளது.வஃக்ப் வாரியத்திற்கு இவளவு பெரிய சொத்துக்களை சட்டரிதியாக அபகரிக்க வேண்டும் என திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளனர்.வஃக்ப் வாரிய தலைவர் பதவிக்கு இஸ்லாமியர் அல்லாதவர்களை கொண்டுவர இந்த அரசு பார்க்கிறது.எனகூறினார்
மேலும் விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ்
செய்தியாளரை சந்தித்தார் அவர் பேசுகையில்.
இந்தியா அரசு 22 மொழிகளை இந்திய மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒன்றிய அரசு இந்தி சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் என் முன்னுரிமை அளிக்கிறது இந்த இரண்டு மொழிகளுக்கும் நிதி ஒதுக்கிறது. இரண்டு மொழிகளை தூக்கிப்பிடித்து கொண்டு மற்ற மொழிகளை ஓரங்கட்டுவதே ஒரு கொள்கையாக ஒன்றிய அரசு கடைபிடிக்கிறது. மும் மொழிக் கொள்கை எப்படி ஏற்றுக் கொள்வது.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாத அண்ணாமலை அவர் பள்ளி நடத்துகிறார் அவர் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் அவருக்கு குழந்தைகள் அந்த பள்ளியில் பயிலுகின்றனர்.என சல்லித்தனமாக திசை திருப்புகிறார் மடைமாற்றுகிறார் அண்ணாமலை. ஒரு கொள்கை ரீதியான பிரச்சனையை தனிநபர் பிரச்சினையாக அண்ணாமலை மாற்றுகிறார். இந்தியை திமுக மற்றும் எதிர்க்கிறது பாஜகவை தவிர அத்தனை கட்சிகளும் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து வருகிறது. அண்ணாமலை கேள்வி கேட்க வேண்டுமென்றால் அன்புமணி,அதிமுக கட்சிகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ்சி பள்ளி நடத்தவில்லையா அவர்களது பிள்ளைகள் வேறு மொழி படிக்கவில்லையா ஒட்டுமொத்த தமிழகமே சேர்ந்து ஒரு கருத்தில் இருப்பது என்றால் அதை பார்க்க வேண்டும் அதை எதிர்கொள்வதற்கு துணிவில்லாமல் மடை மாற்றுவதற்கு அண்ணாமலை வேலை செய்கிறார்.
மும்மொழிக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்றால் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மக்கள் 22 மொழிகளில் ஒரு மொழியை வைத்தால் அது எப்படி சாத்தியம் 22 மொழிகளுக்கும் பொதுவான ஒரு மொழியான ஆங்கிலம்.
தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் பொதுவான மொழிஆங்கிலம்.
நிர்மலா சீதாராமன் கடைசி பட்ஜெட்டில் 22 மொழிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க உள்ளார் என விவாதத்திற்கு வர அண்ணாமலை தயாராக உள்ளாரா என விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பினார்.
ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளனர் என வாதத்திற்கு வர தயாரா எனவும் மோசடியாக எந்த மொழியையும் மும் மொழிக் கொள்கையில் படிக்கலாம்.
முற்போக்கான மாநிலம் விழிப்புணர்வு கொண்ட மாநிலம் எப்படி ஏமாற முடியும் தேன் தடவிய வார்த்தைகள் மூலம் மும்மொழிக் கொள்கை சொன்னாலும் அது இந்தி திணிப்பே தான் என புரிந்து கொண்ட தமிழ்நாடு ஏமாறாது என விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஷா நவாஸ் பேசினார்