தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
இப்பள்ளியில் தொடர்ந்து தமிழக அரசின் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி பார்வையின் போது வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி இப்பள்ளியின் சத்துணவை பார்வையிட்டு மாணவர்களிடம் சத்துணவு தொடர்பான தகவல்களை கேட்டபோது , மாணவர்கள் அனைவரும் சத்துணவு நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தனர் .
பள்ளி சத்துணவை சுவை பார்த்து , சமையலர் தமிழரசி ,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் வாரம்தோறும் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தி வருவதற்கும் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களிடம் சத்துணவில் வழங்கப்படும் காய்கறிகளை வீணாக்காமல் நல்ல முறையில் சாப்பிட்டு உடலை நன்றாக வைத்திருந்தால் தான் கற்கும் கல்வி நல்ல முறையில் நமக்கும் வந்தடையும் என்கிற தகவலையும் எடுத்துக்கூறினார் .