திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலக்கிய மன்ற விழா, பள்ளி விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. நாவளவன் தலைமை வகித்தார்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க. செல்வம், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சு. சுமத்ரா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் புலவர் சிவ. செல்லையன், பொருளாளர் சிங்கு தெரு எஸ். ஆர். ராஜேஷ், இணைச் செயலாளர் எஸ் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் எம். பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கி. சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் முதுகலை ஆசிரியை ஆர். லலிதா ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. சௌந்தரராஜன், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் தி. ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இலக்கிய வளர்ச்சிக் கழகம் பொதுச் செயலாளர் நல்லாசிரியர் புலவர் எண்கண் சா. மணி இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.

பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தெய்வ. பாஸ்கரன், வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் எஸ். சரவணன், வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் ந.சி. சுகந்தி, வலங்கைமான் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) த. ரவிச்சந்திரன், ஆர். விஜய பூபாலன், ஆசிரிய பயிற்றுநர் டி. புனிதா, பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் ஜி. சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நல்லம்பூர் கே. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பா.வசந்தி உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பள்ளியின் முப்பெரும் விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வழங்கப்படும் பரிசு பொருட்களை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வலங்கைமான் ஆசிரியர் எஸ். சம்பந்தம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் க. செல்வம், வலங்கைமான் பேரூராட்சி மன்ற 8-வது வார்டு கவுன்சிலர் கதிர். வீரமணி, வலங்கைமான் ஆர். பி. அரசு ஏஜென்சி உரிமையாளர் ஆர். விஜய ராகவன் ஆகியோர் தங்களுடைய சொந்த செலவில் அன்பளிப்பாக வழங்கினர், விழா நிறைவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜி. காமராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Share this to your Friends