தேனி மாவட்டம் பெரியகுளம்
எண்டபுளிபுதுபட்டி அருகில் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே நாளில் ஒரு நபர் திருக்குர்ஆன் முழுவதுமாக மனப்பாடமாக ஓதும் நிகழ்வு மதரஸா வளாகத்தில் சித்தையன் கோட்டையைச் சேர்ந்த இக்கல்லூரியின் மாணவன் சையது பாசித் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருக்குர்ஆன் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது,
நிகழ்வின் போது முஹம்மது ஹுஸைன் நிறுவனர் மற்றும் முதல்வர் ஜே ஏ எம் இறையியல் கல்லூரி பெரியகுளம், முஹம்மது இத்ரீஸ் தாளாளர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி கே புதூர் மதுரை, அபுதாஹிர் தலைவர் ஜே ஏ எம் இறையியல் கல்லூரி பெரியகுளம், அஜீஸீர் ரஹ்மான் பொருளாளர் ஜே ஏ எம் இறையியல் கல்லூரி பெரியகுளம், முஜிப்பூர் ரகுமான் நிர்வாகி ஜேஎம் இறையியல் கல்லூரி பெரியகுளம்,
அமீர் தங்கள் நிர்வாகி மற்றும் பேராசிரியர் ஜே ஏ எம் இறையியல் கல்லூரிபெரியகுளம், மதரஸாவின் பேராசிரியர்கள் ஆலிம் அஹமது முஸ்தபா, அப்துல் அஹத், அப்துல் ரகுமான், மற்றும் ஜாமிஆ அல்அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் முபஷ்ஷரி உலமா பேரவைநிர்வாகிகள், பள்ளி ஜமாத்தார்கள் ஆலிம் உலமாக்கள் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்,
நிகழ்ச்சியின் இறுதியில் எம் எம் நிஜாமுதீன் நன்றியுரை வழங்க நிகழ்ச்சியானது இனிதே நிறைவுற்றது.