துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் 21/02/2025 அன்று பொறுப்பு ஏற்று கொண்டார்.ஏற்கனவே பணிபுரிந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து லால்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் முத்தையன் துறையூர் புதிய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
