தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற புத்தாக்க பயிற்சி வகுப்பு Cavin Kare மற்றும் Nivea பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் டி.விகிறிஸ்டி மற்றும் பதிவாளர் முனைவர் எம்.அப்துல் கனிகான் துவக்கி வைத்தனர். பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி முனைவர் வேங்கடா HRD முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக Cavin Kare இந்தியாவிற்கான தலைமை செயல் அலுவலர் சந்தோஷ் மற்றும் NIVEA தமிழக மேலாளர் தேவராஜ் கலந்து கொண்டனர்.

Cavin Kare இந்தியாவிற்கான தலைமை செயல் அலுவலர் சந்தோஷ் பேசும் பொழுது, மாணவர்கள் புதிய சிந்தனையோடும் தன்னம்பிக்கையுடனும் தொலைநோக்கு பார்வையுடனும் முயலும் போது தான் தங்கள் தொழில் சாதிக்கலாம் என்று ஊக்கமூட்டினார்.

தேவராஜ் பேசுவையில் மாணவர்கள் எவ்வாறு பன்னாட்டு கம்பெனிகளில் உயர்நிலையை அடைய தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் அவர்கள் தங்களின் உற்பத்தி பொருள்களான மீரா ஷாம்பு, சிக் ஷாம்பூ, இண்டிகா ஹேர் டை, கவின் மில்க், NIVEA போன்ற பொருட்கள் எவ்வாறு மக்களை சென்றடைந்தன என்பது போன்று தங்களின் அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் தங்களின் சந்தேகங்களையும் புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளையும் அவர்களிடம் பெற்று பயனடைந்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் பல்கலைக்கழக உதவியுடன் படிக்கும் போதே தொழில் தொடங்கி சாதித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். M.P. நாகேஸ்வரன் பெயரில் இளைய ஆளுமைக்கான என் “N”விருதும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Share this to your Friends