தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்துள்ள திரவியம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திரவியம் கல்வி குழுமங்களின் சேர்மன் மருத்துவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார்.
கல்விக்குழும செயலாளர் ஹேமலதா பாண்டியராஜ், இயக்குனர் இமானுவேல் ஜூடா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டப்படிப்பு படித்து முடித்த சுமார் 2000 மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி மாணவியர், பேராசிரியர், பெற்றோர் பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.