தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர் வினோத் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சார்ந்த அன்பழகன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரிகள் சங்கத்தைச் சார்ந்த சக்கரவர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊழியர்கள் சங்கத்தைச் சார்ந்த யோகராஜ், இந்தியன் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு புவனா, கூடுதல் செயலாளர் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர்கள் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பைச் சார்ந்த காசிராஜன், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே நிரப்ப வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் வேலையை உடனே அமல்படுத்த வேண்டும். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.