மதுரை மாநகரகாவல்துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் தற்போது 8 மோப்ப நாய்கள் உள்ளன. இந்நிலையில் காவலர்களோடு இணைந்து இந்த மோப்ப நாய்கள், வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் கள் தப்பிச்சென்ற பகுதி, போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு துப்பறியும் பணிகளில் வெகு சிறப்பாக பங்காற்றி வருகின்றது.


இந்நிலையில் மதுரை மாநகர காவல்துறைக்கு புதியதாக ஒரு மோப்பநாய் தற்போது வருகை தந்துள்ளது. இப்படை பிரிவினர் அந்த மோப்ப நாயுடன் மாநகர காவல் ஆணையர் லோகநாதனை சந்தித்தனர்.

அப்போது அந்த மோப்ப நாய்க்கு அழகர் என ஆணையர் லோகநாதன் பெயரிட்டார். பின்னர் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பிரிவில் உரிய பயிற்சி அளிக்கும் படி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.

Share this to your Friends