தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்
தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளில் “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே! 2026”
“சாதிக்க சபதம் ஏற்போம் அம்மாவின் பிறந்தநாளில்” என்ற வாசகத்துடன், ஒரு சதுரத்தின் மத்தியில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மற்றும் நான்கு மூலைகளில் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன் ஆகியோரின் புகை படங்களுடன் கூடிய போஸ்டரை அன்றைய ஒருங்கிணைந்த அதிமுகவின் அம்மா பேரவை செயலாளர், 20-வார்டு செயலாளர் மற்றும் தற்போதைய மாமன்ற உறுப்பினர் தஞ்சை என்.சரவணன் மாநகரம் முழுவதும் ஒட்டியிருந்தார்.
இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது அவர் கூறியது:- சிறுவயதில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் மீது உள்ள அன்பாலும் ஈடுபாடாலும் “அண்ணா திமுகவில்” இணைந்த எனக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவால் கழகத்தில் அம்மா பேரவை செயலாளராகவும் 20-வட்டக் கழக செயலாளராகவும் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்கள். அம்மா அவர்கள் பல மேடைகளில் பேசும்போது எனக்கு பின்னால் அஇஅதிமுக நூறாண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக இருக்கும் என்று சூளுரைத்தார். அவர் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்களிலேயே இந்த கழகம் இப்படி சிதைந்து இருப்பதை ஒரு அடிமட்ட தொண்டனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
புரட்சித் தலைவரால் ஈர்க்கப்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று திசை தெரியாமல் தவிக்கும் நிலையில் உள்ளோம்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்சிக்கும், கட்சியின் சின்னத்திற்கும் கொடுக்கும் நெருக்கடியை பார்க்கும் போது அம்மா அவர்கள் கூறியது போல் இந்த கழகம் நூறு ஆண்டு நிலைத்து நிற்குமா? என்ற ஐயம் ஏற்படுகிறது.
புரட்சித் தலைவரால் துவங்கப்பட்ட, அம்மா அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. இன்று ஒரு பக்கம் சசிகலா அம்மையார், முன்னாள் முதல்வர்கள் ஐயா ஓபிஎஸ், ஐயா இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் எதிர், எதிர் துருவங்களாக தனித்தனியாக இருப்பதை பார்க்கும் போது அம்மா கூறிய தீய சக்தி திமுகவை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. இன்றைய நிலையை உணர்ந்து இவர்கள் அனைவரும் அம்மாவின் எண்ணத்தை மனதில் நினைத்து எதிர் வரும் அம்மாவின் பிறந்த நாளில் ஒன்றிணைந்தால் இந்தக் கழகம் அசுர பலத்தோடு 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அம்மா கூறியபடி அவருக்கு பின்னால் நூறாண்டு காலம்வரை இந்த அண்ணா திமுக முன்னேற்றக் கழகத்தை யாராலும் அசைக்க முடியாது என்ற தன் எதிர்பார்ப்பை பகிர்ந்து கொண்டார்.