அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கமல்கிஷோர் அவர்களிடம் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
அய்யா வைகுண்டர் அவர்கள் தனது வாழ்க்கையை சமூக மாற்றத்திற்காக அர்ப்பணித்தவர். “சம்பிரதாய சமாதானம்” என்ற இயக்கத்தை உருவாகி, சாதிய வேற்றுமையைக் கண்டித்து மக்கள் ஒன்றிணைவதற்கான வழிகளை உருவாக்கியவர். மக்களிடையே ஈகை, ஒழுக்கம், சமத்துவம், மற்றும் தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி போதனை செய்தார். அவர் “சமூக வளர்ச்சி” மற்றும் “தீண்டாமை ஒழிப்பு” போன்ற கருத்துகளை முன்வைத்து ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டவர் அய்யா வைகுண்டரின் சமூகப் பணிகள் இன்று வரை அவரது பக்தர்க்களால் போற்றப்படுகிறது.
அய்யாவின் 193வது அவதாரத் திருநாள் வருகிற மார்ச் மாதம் 4ம்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப் படுகிறது. இந்த நன்நாளில் அய்யா வைகுண்டரின் புனிதத் தலமான கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் கோலாகல விழா எடுக்கப்படுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் சாமிதோப்புக்குச் சென்று வழிபாடு செய்து, அய்யாவின் ஆசியினைப் பெற்று வருவார்கள். தென்காசி மாவட்டத்திலும் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் குடும்பத்துடன் சாமிதோப்பு செல்வார்கள்.
எனவே தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள ஏதுவாக மார்ச் 4ம்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.