காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி
பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை வழங்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
காஞ்சிபுரம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீப காலமாக சிறுமிகள், பெண் குழந்தைகள், பள்ளி குழந்தைகள் என பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ஆங்காங்க குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றவாளிகளுக்கு வன்மையான தண்டனை வழங்க கோரியும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
சமீபகாலமாக பள்ளி பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்கொடுமை செய்வதை தமிழக அரசு தலையிட்டு வன்மையான தண்டனைகளை வழங்க கோரி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயளாலர் மதன்குமார், மாவட்ட இனை செயளாலர்
சிவ.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளர் வாயிசன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி தலைவி மும்தாஜ், சிறப்பு அழைப்பாளர்கள்
அறிபு அழைப்டாாம். சுப்புலன்மிஅம்மாள் சுப்புலட்சுமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்தி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர்
அல்லிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.