ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டு
தமிழ்க்கூடல் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை
பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு இணைந்து ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ் கூடல் விழா
பள்ளி வளாகத்தில்நடைபெற்றது.
ஒரத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 28 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஆண்டு விழா மற்றும் தமிழ்க்கூடல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முதுகலை தமிழ் ஆசிரியர் அ.பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்,
உதவி தலைமை ஆசிரியர் ரா.துரைமுருகன் ஆண்டுஅறிக்கை வாசித்தார்,
தலைமை ஆசிரியர் பா.ரேணுகா விழாவில் தலைமை தாங்கினார்,
இவ்விழாவில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன் முன்னிலை வகித்தார்,
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஒரத்தி ஓ.பி.சி.மாறன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் எல்.மணி,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெ.சாந்தா,பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் என்.சீனிவாசன்,உள்ளிட்டோர் விழாவில் சிறப்புரையாற்றினர்,
மேலும் இதில் டாக்டர் சங்கீதா வினோத்குமார் எஸ்.சந்திரலேகா சரவணன்
உணவு உபசரிப்பு வழங்கினர்.செயற்பொறியாளர் ஓய்வு பொதுப்பணித்துறை மற்றும் மாநில தர கண்காணிப்பு பொறியாளர் ஊரக வளர்ச்சி துறை சி.சொக்கலிங்கம்,
கலை நிகழ்ச்சி மற்றும் விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் உதவி தலைமை ஆசிரியர் கே.வி.வெங்கடபெருமாள்
அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.