ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்
பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அத்தியூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரால் அம்பேத்கர் சிலை அமைக்கபட்டு இருந்தது. மேற்படி சிலையின் கால் பகுதி மர்ம நபர்களால் சேதப்படுத் பட்டது தொடர்பாக கடந்த 2019 ல் பட்டியல் சமூகத்தினர் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் வரதராஜ். பாமக வை சார்ந்த கவியரசன், பிரசாந்த், சூர்யா. பாரத், ஐயப்பன், கார்த்திக், பெரியசாமி, வெங்கடேசன், விஜய், மற்றும் திமுக வை சார்ந்த சரவணன், லெனின் உள்ளிட்டோர் மீது புகார் கொடுக்கபட்டு அந்த புகார் மங்களமேடு போலிசாரால் (குற்ற எண் 147 / 2019ல்) வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் SC / ST வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு Splsc62/2020 ல் வழக்கு கோப்பிற்கு எடுக்க பட்டு எதிரிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் தங்கதுரை, சக்திவேல் ஆஜராகியும்,
அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் புகழேந்தியும் ஆஜராகி வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று 21.02.2025ம் தேதி சிறப்பு நீதிமன்றம் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் வரதராஜ் , பா.ம.க பிரசாந்த், கவியரசன், மற்றும் சூர்யா, பாரத். ஐயப்பன், கார்த்திக், வெங்கடேசன், விஜய், மற்றும் திமுக வினர் சரவணன், லெனின் உள்ளிட்டோர் மீது போடப்பட்ட அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .