கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து ஒரு வார காலம் பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இன்று கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணியாற்றினார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்ற ஒன்றிய அரசின் ஆணவப் போக்கை கண்டிக்கும் வகையிலும், ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசுக்கு ஒதுக்க வேண்டிய சமக்கரா சிக்சா அபியான் திட்டத்தின் நிதி ₹2152 கோடியை விரைவில் வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் (21/02/2025) வெள்ளி முதல் (28/02/2025) வெள்ளி வரை ஒரு வார காலத்திற்கு கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு செல்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து அடுத்த வார இறுதியில் சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகம் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடும் வகையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியபெருமக்கள் (21/02/2025) வெள்ளி முதல் (28/02/2025) வெள்ளி வரை ஒரு வார காலத்திற்கு கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்குச் சென்று பணியாற்ற வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து செயல்படுத்தும் விதமாக கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாவட்ட துணை தலைவர்கள் தெய்வீகன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாநில செய்தித் தொடர்பாளர் ரகமதுல்லா, வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார், கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி கலைமணி,
வட்டார மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, வட்டார மகளிர் அணி இணைச்செயலாளர்கள் சுகன்யா ,வேம்பன் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வட்டார தலைவர் ரவி, விராலிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வட்டார துணைத் தலைவர் ராமலிங்கம், வட்டார செயற்குழு உறுப்பினர் மத்தியாஸ், ஆத்தங்கரை விடுதி உயர்நிலைப் பள்ளியில் பொருளாளர் பழனிச்சாமி மாவட்ட துணை தலைவர் கண்ணன், அரசு துவார் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட துணை செயலாளர் ரவீந்திரன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார மகளிர் அணி செயலாளர் சந்தியா ஒருங்கிணைப்பில் அனைத்து ஆசிரியர் பணிகளும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினார்கள்.
மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் எஸ் மணிகண்டன், குமரேசன், கணேசன்,கணேஷ் பூபதி, சிறப்பாசிரியர் அறிவழகன் உள்ளிட்ட கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 150 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்புக்கோட்டை அணிந்து பணியாற்றினார். இது போல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பு தெரிவித்து பணியாற்றினார்கள்.