சமயநல்லூர்
மதுரை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியை பாஜக கட்சி வளர்க்கும் நோக்கில் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட தலைவாராக ராஜசிம்மன் இரண்டாவது முறையாக பதவி வழங்கபட்டது.
மேலும் மண்டல, மாவட்ட, ஒன்றிய பேரூர் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சமயநல்லூரில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் இளைஞர் அணி தலைவர் சிவராமன் வரவேற்றார்,
மாநில நிர்வாகி பழனிவேல்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்தமூர்த்தி முன்னிலை வைத்தார்கள் முன்னாள் மண்டல் தலைவர் தோடநேரி முத்துபாண்டி, தலைமையில் சமயநல்லூர் புதிய மண்டல் தலைவராக அனுசியா, பதவி ஏற்றார்.
அவருக்கு கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்தும் கைத்தறி ஆடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர் இதில் மாவட்ட, தலைவர் ராஜசிம்மன் கலந்துகொண்டு வாழ்த்தினார் ,
மேலும்,ஒன்றிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்று கொண்டனர் இதில் பேசிய மாவட்ட தலைவர் ராஜசிம்மன் மத்திய அரசின் திட்டங்களால் டெல்லியில் வெற்றி பெற்று இன்று அங்கு அமைய உள்ள பாஜகவின் ஆட்சி சிறப்பாக நடைபெற உள்ளது
முதல்வராக ஒரு பெண் பதவி ஏற்க உள்ளார் நமது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என்றார், இதில், மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வின்சென்ட், மாவட்ட செயலாளர் ரவிசங்கர், மாவட்ட செயக்குழு மதன்ராஜ், மற்றும் கதிரவன், கிருஷ்ணன், கருப்புசாமி, அலங்காநல்லூர் தெற்கு மண்டல தலைவர் இருளப்பன், அலங்கை வடக்கு மண்டல் முனிஸ்வரி, வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவர் முள்ளை முத்துபாண்டி, சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல், மற்றும் ஏராளமான பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட தலைவர் ராமதுரை, நன்றி உரை கூறினார்..