அரியலூர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரயில் நிலை வளாகத்தில், எஸ்.ஆர்.எம்.யு}வினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே தனியார் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒப்பந்தம் மற்றும் ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். லட்சக்கணக்கான காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 1.1.2023 முதல் அனைத்து கேட்டரிகளுக்கும் சிஆர்சி பதவி உயர்வு வழங்கிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் கொண்டு வரப்படவுள்ள பயமெட்ரிக்கை கைவிட வேண்டும். 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும்.
லோகே பைலட், கார்டுகளின் வேலை நேரத்தை குறைத்து வாரம் ஒரு முறை முழுநாள் ஓய்வினை கட்டாயமாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் அரியலூர் கிளைச் செயலர் த.செல்வகுமார் தலைமை வகித்தார். செயலர் வேல்முருகன், பொருளாளர் எம்.கார்த்திக், உதவி செயலர்கள் ரகு, வீரமுத்து,வீ.கண்ணன், சிவககுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.