கோவை மாவட்ட காவல்துறையினர் மீது திருநங்கைகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு- மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட காவல்துறையினர் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வருகை புரிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து திருநங்கைகள் கூறுகையில் கோவை மாவட்ட காவல்துறையினர் திருநங்கைகளை தரகுறைவாக நடத்துவதாகவும் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் வழக்கு பதிவு செய்வதாகவும் கூறினர்.

திருநங்கைகள் மீது ஏதேனும் புகார்கள் வந்தாலும் விசாரணையை மேற்கொள்ளாமல் வழக்கு பதிவு செய்வதாகவும் தங்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் முறையானதாக இல்லை எனவும் கூறினர் வேலைக்கு செல்லும் இடங்களில் பாலியல் தொந்தரவுகள் இருப்பதாகவும் பாலியல் தொந்தரவுகளை கூட சமாளித்து விடலாம் ஆனால் கேலி கிண்டல் செய்கிறார்கள் என தெரிவித்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு குறிப்பிட்டவர்கள் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Share this to your Friends