கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குஞ்சிபாளையம் பொள்ளாச்சி பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,என 40 பதக்கங்களுடன் மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்..

தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு தேசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி கோவை சரவணம்பட்டி நலம் யோகா மையத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இதில் ,பள்ளியில் பயிலும்,மூன்று வயது முதலான குழந்தைகள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..

பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இதில், ஆர்ட்டிஸ்டிக்,ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம், சக்ராசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன..

இதில்,கலந்து கொண்ட பொள்ளாச்சி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குஞ்சிபாளையம் பள்ளி ,குழந்தைகள் உட்பட மாணவ,மாணவிகள் தங்கம், வெள்ளி,என 40 பதக்கங்கள் பெற்று,அதிக புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்..

இந்நிலையில் மாணவ,மாணவிகளுக்கு, பள்ளியின் தாளாளர் திருமதி கா . மாணிக்கம் பழனிசாமி, பள்ளியின் பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி , நலம் யோகா நிறுவனர் ராஜேஸ் குமார் மற்றும் பெற்றோர்கள் ,உறவினர்கள்,பள்ளி ஆசிரியர்கள் , பொது மக்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவிகள் விரைவில் பாலியில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ள உள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது.

Share this to your Friends