வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்த முயற்சியால் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.துறையூரில் திருச்சி ரோடு, முசிறி ரோடு, பெரம்பலூர் புறவழி சாலை, துறையூர் பகுதிகளை இணைக்கும் நான்கு ரோட்டில் ரவுண்டானா அமைந்துள்ளது.
இந்த ரவுண்டானா நடுவில் காவல் துறை சார்பில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு வாகனங்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு செல்பவர்களை கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ரவுண்டானா நடுவில் இருக்கும் சிசிடிவி கேமராவை மறைக்கும் வகையில் தனியார் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு பெரிய அளவில் பிளக்ஸ் தட்டி விளம்பரங்கள் வைக்கப்பட்டு வந்தது.இதனால் எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நடக்கும் சூழ்நிலை உருவானது. அது மட்டுமல்லாமல் சிசிடிவி கேமரா மூலம் குற்ற சம்பவங்கள் ஈடுபட்டு செல்பவர்களை கண்காணிக்கவும் முடியாமல் இருந்தது.
இதனால் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையில் அரசியல் தலைவர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக பேசி ரவுண்டானா நடுவில் எந்த விதமான பிளக்ஸ் பேனர்களும் வைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காவல் துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று சமீப காலமாக எந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் தனியார் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனால் விபத்து நடப்பதும் தவிர்க்கப்பட்டுள்ளது. காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு கொடுத்த
அரசியல் தலைவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.
துறையூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றம் சம்பவங்கள் நடக்காதவாறு இரவு பகலூம் தொடர்ந்து கண்காணித்து பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் காவல் ஆய்வாளர் செந்தில்குமாரின் இம்முயற்சிக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.