டாக்டர் எஸ். என். எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற (MIRARI 2K25) மிராரி கலை விழா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் எஸ். என். எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் (MIRARI 2K25) மிராரி 2025 எனும் தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவை, கல்லூரியின் தாளாளர் மருத்துவர் எஸ். இராஜலட்சுமி அம்மா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் முதலாம் ஆண்டு உளவியல் மாணவி ரோஸ் லலிதா கிரேஸ் சார்லஸ் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.அனிதா, துணை முதல்வர் முனைவர் ப. நரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் எஸ் என்.எஸ் கல்விக் குழுமங்களின் செயலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் முனைவர் எஸ்.நளின் விமல் குமார், சி.இ.ஓ முனைவர் எம். டேனியல், கல்வி ஆலோசகர் முனைவர் ஜி. ஞானசேகரன், புல முதன்மையர் முனைவர் செ.பழனிச்சாமி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூப்பர் சிங்கர் புகழ் செல்வி. மானசி கலந்து கொண்டார் கல்லூரியின் முன்னாள் மாணவரும் வழக்கறிஞருமான முரளி தரன் மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசினார்.

விழாவில் தமிழகத்தில் உள்ள 55 கல்லூரிகளில் இருந்து 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்தனர்..

இதில் சிறந்த மாணவ,மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவின் இறுதியாக தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் வைதேகி நன்றியுரை வழங்கினார்.

Share this to your Friends