கோவை மாவட்டம் வால்பாறையில் மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தலைமையில் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பகுதிகளிலும் துறைசார்ந்த அதிகாரிகள் சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுவர துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் அதைத்தொடர்ந்து ஆட்சியர் நேரடியாக வால்பாறை அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு உணவை உட்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்
பின்பு வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர் 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் கலந்துரையாடி பாட சம்பந்தமான கேள்விகளை கேட்டார் அப்போது உரிய பதிலளித்த ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
அதனைத்தொடர்ந்து நெடுங்குன்று மலை கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உரியமுறையில் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்க் கொள்வதாகவும் தெரிவித்தார் அதன் பின்னர் எஸ்டேட் தோட்டத்தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பின்பு சோலையாறு அணை பகுதியில் நடைபெற்றுவரும் பணி மற்றும் அணையை ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்
அதைத்தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைகள் மற்றும் போதிய வசதிகள் உள்ளனவா என்றும் கேட்டறிந்தார் பின்பு வால்பாறை காவல்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டதைத்தொடர்ந்து நகராட்சி சமுதாய நல கூடத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு இறுதியாக நகராட்சி அலுவலகத்தில் 21 வார்டு பகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள குறைகள் பற்றியும் முழுமையாக கேட்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு பிறப்பித்து மேலும் ஒருநாள் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் தேவைகள் குறித்த மனுக்களை பெற்று உரிய முறையில் விரைந்து தீர்வு காணவும் உத்தரவு பிறப்பித்தார்
இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) விஸ்வநாதன், மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஸ்ரீ நிதி,நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், வால்பாறை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன்,தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் (பொறுப்பு) சங்கீதா, துணை ஆட்சியர் (பயிற்சி) மது அபிநயா, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, வட்டாட்சியர் மோகன் பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்