கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம் .
அதிகாரிகள் பேச்சுவார்த்தை .15 பெண்கள் உட்பட 40 பேர் கைது

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே பனைமரத்தில் கள் பானையை உடைத்த போலீசாரை கண்டித்து பனையேரிகள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம் .அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் 15 பெண்கள் உட்பட 40பேரை போலீசார் கைது செய்தனர் .

விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி மதுரா பூரிகுடிசை பகுதியில் நேற்று காலை விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையில் போலீசார் பனைமரங்களில் கள் இறக்க கட்டியிருந்தபானைகளை உண்டிவில்லால் உடைத்தனர். இதையடுத்து தமிழ்நாடு பனையேரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்பாண்டியன் தலைமையில் பெண்கள் ,குழந்தைகள் என குடும்பத்தினருடன் நாரசிங்கனுாரில் சென்றுஉடைந்த கள் பானைகளுடன் சாலையோரம் அமர்ந்து கள் இறக்க அனுமதி கோரியும்,முதல்வர் அனுமதி வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், ஏ.டி.எஸ்.பி., திருமால் ,டி.எஸ்.பி., நந்தகுமார் ,இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . அவர்கள் தங்களது கோரிக்கையான கள் இறக்க முதல்வர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கூறினர்.அதிகாரிகள் அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளை இறக்கி விற்பனை செய்வது தவறு என கூறினா்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போராட்டம் தொடர்ந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிசென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this to your Friends