கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட் இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகம்மது ரபி ஹெல்மெட்டுகளை வழங்கினார்..

கோவை நகரில் அதிகரித்துக் கொண்டு வரும் போக்குவரத்து நெரிசல்களால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது..

இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் சாலை விதிகளை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்..

இந்நிலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக கோவை ஆசாத் நகர் அத்தர் ஜமாத் உயர்நிலை பள்ளியில் சாலையில் பாதுகாப்பான பயணம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில்,கோட்டக் மகிந்திரா நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்.நிதியில், இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் இணைந்து மாணவ,மாணவிகளுக்கு இலவச தலைகவசங்களை வழங்கினர்..

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பழனிசாமி ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில்,
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஹெல்மெட்டுகளை வழங்கினார்..

முன்னதாக பேசிய அவர், கல்வி கற்பதோடு ஒழுக்கத்தை கற்பது அதை விட அவசியம் என குறிப்பிட்ட அவர்,நல்லொழுக்கங்கள் இருந்தால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேற்றங்களை பெற முடியும் என தெரிவித்தார்..

எனவே மாணவர்களுக்கு ஒழுக்கங்களை கற்று கொடுப்பதில் பெற்றோர்களின் பங்கு அவசியம் என குறிப்பிட்டார்.. விழாவில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் தென்னரசு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்..

நிகழ்ச்சியில், இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் இயக்குனர் சித்ரா, ஏ.ஐ.டி.அமைப்பின் இயக்குனர் வாசுதேவ ராஜ்,மற்றும் அண்ணாதுரை,
வழக்கறிஞர் நளினா, அத்தர் ஜமாத் நிர்வாகிகள் தலைவர் அமானுல்லா.
செயலாளர் பீர்முகமது. பொருளாளர் பக்கீர் முகமது. முத்தவல்லி ஜாஃபர் அலி. துணைத் தலைவர்கள் சையது உசேன். சாகுல் ஹமீது. செயற்குழு உறுப்பினர்கள் ஆஷிக் அகமது. முகமது இப்ராஹிம். முகமது யூசுப்,

Share this to your Friends