இவ்விழாவில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், இந்நாள் கல்லூரி முதல்வர், பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்லூரி முதல்வர்கள், தற்போதைய பேராசிரியர்கள், அலுவலர்கள், பச்சையப்பன் அறக்கட்டளையின் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள், பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவித்தும், குத்து விளக்கு ஏற்றி வைத்தும் விழாவினை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக 75 ஆண்டுகளாக பச்சையப்பன் ஆடவர் கல்லூரி கடந்து வந்த நிகழ்வுகள் பற்றிய கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் ப. முருககூத்தன் வரவேற்புரை மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.பார்த்திபன் கல்லூரி வளர்ச்சி, அதன் பெருமிதத்தை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் கல்லூரி முதல்வர் முனைவர் ப. முருககூத்தன் 75-வது வைர விழா ஆண்டு (1950-2024) கொண்டாட்டத்திற்காக நடத்தப்பட்ட சிறப்பு இலட்சினைப் போட்டி, ரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம், பல்வேறு துறைகளில் நடத்தப்பட்ட மாநாடு, கருத்தரங்கம், செய்முறைப் பயிற்சிப் பட்டறை, பயிலரங்கு, மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்த பதாகை ஓவியப்போட்டி, சிறிய திரைப்பட போட்டி, பச்சையப்பன் அறக்கட்டளையின் ஆறு கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி பேச்சுப் போட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி மற்றும் வினாடி வினா போட்டி போன்றவை கல்லூரியில் நடத்தப்பட்டது.

இதில் 500-கும் மேற்பட்ட மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து.அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, என்.கிருபாகரன் கல்லூரியின் வளர்ச்சி, அவை எவ்வாறு இந்த காஞ்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது என்பதை விரிவாக எடுத்துக் கூறினார். பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலாளர் சி. துரைகண்ணு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி இந்த குறுகிய காலத்தில், பெரிய அளவில் நிறைய நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் நடத்தியதை அறிந்து பெருமிதம் கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களும், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளும், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், பொருளியல்துறை தலைவருமான முனைவர் ந. பழனிராஜ் கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்ளும், தமிழ்துறை தலைவருமான முனைவர் வ. அண்ணாதுரை, அலுவலக கண்காணிப்பாளரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான கே. மலர்விழி, அனைத்து கல்லூரி அகமதிப்பீட்டுக் குழு (IQAC) உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்றனர். விழாவின் நிறைவில் கல்லூரி ஆசிரியர்களும், அலுவலர்களும், பெருமளவில் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Share this to your Friends