தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,
.விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வட்டம், வடக்கு தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்திற்கு பாத்தியமான பறையாகுளம் சில தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து பட்டியல் சமூக மக்கள் அக்குளத்தை பயன்படுத்த விடாமல் அக்குளத்தை துர்த்து நாசம் செய்ததுடன் தனி நபர்கள் வளைத்து வீடு கட்டி உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றிட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இதுவரை நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பறையா குளத்தை பட்டியலின சமூக மக்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும், இதற்காக நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து நீதியை பெற்று தந்து சட்டபூர்வமாக போராடி வருகிற சமூக ஆர்வலர் எல்.ஜி என்கிற எல்.கணேசனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் நேரில் சந்தித்து மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் எல்.கணேசன், துணை பொதுச் செயலாளர் அரெ.முகிலன், தஞ்சை மையம் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.பி.சேவியர், மகளிர் விடுதலைப் பேரமைப்பு மாநில செயலாளர் கு.ரோஸ்லின், மேற்கு மாவட்ட செயலாளர் ரமிலா தமிழ்மாறன், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் தஞ்சை தமிழ், ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ரியாஸ், தஞ்சை மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரடெரிக் பிரபாகர் மற்றும் வடக்கு தென்னமநாடு கிராம வாசிகள் பெண்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்ப்பட்டோர் இருந்தார்கள்.