தேனி மாவட்டம் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் போடிநாயக்கனூர் அரசு மருத்துவ வளாகத்தில் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி முன்னிலையில் திறந்து வைத்தார்
நம் உடலின் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன்களை எடுத்துச் செல்வதில் நமது உடலின் இரத்தத்தின் பங்கு முக்கியமானதாகும் சிறுநீரக நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் செய்வதன் மூலம் தனது வாழ்நாளின் ஆயுட்காலத்தை நீடித்துக் கொள்ள முடியும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நலன் கருதி போடி நாயக்கனூர் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் இரத்த சுத்திகரிப்பு மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது
மேலும் போடிநாயக்கனூரில் இருந்து இரத்த சுத்தரிப்பு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் மேலும் போடிநாயக்கனூர் நகர மக்கள் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள் இந்த டயாலிசிஸ் இரத்த சுத்திகரிப்பு மையத்தால் பயனடைவார்கள்.இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் மருத்துவ பணிகள் மரு கலைச்செல்வி போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆணையாளர் எஸ் பார்கவி போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ரவீந்திரநாத் தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான எம் சங்கர் திமுக நகரச் செயலாளர்கள் ஆர் புருஷோத்தமன் 20 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட ஜோடி விங் தலைவர் மகேஸ்வரன் உள்பட மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்