முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்.
தூத்துக்குடி,
இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு சுய-ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பாக இயங்கத் தொடங்கியது.
இக்குழு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் 28 உறுப்பினர்களைக் கொண்டது. இக்குழுவின் 20 ஊடக உறுப்பினர்கள் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் செயல்படும் பிற ஊடகங்கள் மூலம் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
28 உறுப்பினர் குழுவின், 5 பேர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் மூன்று உறுப்பினர்கள் சாகித்திய அகாதமி, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் இந்திய வழக்கறிஞர் கழகம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
இந்தியாவில் ஆட்சி செய்யும் பிரதமர் அமைச்சர் உள்பட தேசிய கட்சித்தலைவர்களுக்கும் பத்திரிகை துறை பக்க பலமாக இருந்து அவர்களின் செயல்பாடுகளை திட்டங்களை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். மத்திய அரசால் ஆர்என்ஐ வழங்கப்பட்டு நாளிதழ்கள், தொலைகாட்சிகள், பல்வேறு பருவ இதழ்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் செயல்பட்டு வருகின்றன.
அதற்கு ஒவ்வொரு மாநில அரசு அங்கீகாரம் வழங்கி தலைமைச் செயலகம் முதல் அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கக் கூடிய சலுகைகள் வழக்கம் போல் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே போல் தமிழகத்திலும் இதுவரை ஆட்சி செய்த எல்லா அரசும் வழங்க வந்தன. கடந்த வருடம் முதல் ஒவ்வொரு மாவட்ட அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு தலைமைச்செயலகத்தில் வழங்குவது போல் செய்தித்துறை இயக்குநர் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதுவும் முழுமையாக இல்லை. 2025ம் ஆண்டு தமிழகத்தில் வழக்கம் போல் வழங்க வேண்டிய அடையாள அட்டை பேருந்து பயண அட்டை போன்றவைகள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகள் ஏராளம். தலைமைச் செயலகத்தில் 3 வகையான கமிட்டிகள் இருக்கின்றன. அதில் உறுப்பினர்கள் சிலர் விறுப்பு வெறுப்புடன் பணியாற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தடையாக இருந்து செயல்படுகின்றனர்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில்: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்த நாளிதழ், பருவ இதழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவருக்கும் பாராபட்சமின்றி அவர்களின் உரிமையான அடையாள அட்டை பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்த 2025ம் ஆண்டு சில கமிட்டி என்ற பெயரில் தங்களுக்கு வேண்டியவர்கள் பொறுப்பில் இருக்கின்ற காரணத்தால் சிறு, நடுத்த, குறு பத்திரிகையாளர்களை முழுமையாக பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டு தங்களது உரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.
ஜனநாயகத்தின் நான்காவது தூணை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று கூறும் தமிழக அரசும் தமிழக முதலமைச்சரும் தங்களது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு முதலமைச்சர் பதவியில் அமருவதற்கு தேவைப்படுகிறது. ஆனால், அவர்களுடைய செயல்பாடுகளை தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் ஊடகத் துறையினர் மட்டும் தேவையில்லையா? இந்த பழிவாங்கும் நடவடிக்கை தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பாரபட்சமின்றி நடைபெறுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பத்திரிகை துறையினர் கோரிக்கையான வீட்டு மனை பட்டா வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை தலைநகர் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை பணியாற்றும் ஊடகத்துறையினருக்கு உள்ள அனைத்து அரசு சார்ந்த திட்டங்களையும் சலுகைகளையும் முறையாக வழங்கிட வேண்டும்.

இந்த கோரிக்கையை முழுமையாக நிறைவேறாத பட்சத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு எடுத்துச் சென்று பத்திரிகையாளர்கள் நலன் பாதுகாக்கும் வகையில் நாங்கள் செயல்படும் நிலை உருவாகும்.
இந்த நிலையை உருவாக்காமல் உடனடியாக போர்க்கால அடிப்படையில் பத்திரியாளர்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், செய்தித்துறை இயக்குநர் உள்ளிட்ட செய்தித்துறையை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு களங்கம் ஏற்படாத வகையில் முன்வர வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.