“விஷன் எம்பவர்” எனும் தொண்டு நிறுவனம் 2017 ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்டதுதற்போது 16 மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 சிறப்பு பள்ளி களில் உள்ள பார்வை திறனற்ற மாணவர்களுக்கும், சிறப்பு ஆசிரியர் களுக்கும் இந்நிறுவனம் மூலம் அறிவியல் மற்றும் கணிதம் அணுகக் கூடிய வகையில் பயிற்சியளிக்கப் படுகிறது.
பிப்ரவரி 28 ம் தேதி உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு இந்நிறுவனத்தால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் த.சு.லூ.தி பார்வையற்றோர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப் பட்டது. அறிவியல் மற்றும் கணித துறைகளில் வருங்காலங்களில் பார்வை திறனற்ற மாணவர்களும் சிறந்த முறையில் சாதிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது.
பார்வையற்றோர் பள்ளியின் தாளாளர் பெர்ஸி ரேணுகா, தலைமையாசிரியை மீனா, விஷன் எம்பவர் நிறுவனத் திலிருந்து கல்வி ஒருங்கிணைப் பாளர் யுவராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
அறிவியல் சோதனைகள், கணிதம் தொடர்பான கணக்கீட்டு சிந்தனையை வளர்க்கும் விளையாட்டுகள், சுற்றுச்சூழலை காப்போம் எனும் தலைப்பில் நாடகம், பாடல், நடனம் என பார்வையற்ற மாணவர்கள் பார்வையுள்ள மாணவர்களுக்கு செய்து காட்டினர். த.சு.லூ.தி தொடக்கப்பள்ளியிலிருந்து 60க்கு மேற்பட்ட பார்வையுள்ள மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் அறிவியல் கண்காட்சியை கண்டு வியந்து பாராட்டினர். வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து “நெருப்பில்லா சமையலின்” கீழ் பல்வேறு விதமான உணவுப்பொருட்களை பார்வைத்திறனற்ற மாணவர்கள் பிற மாணவர்களுக்கு செய்து காட்டி ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறினார். இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் விஷன் எம்பவர் சார்பாக பங்கேற்பாளர் பதக்கங்களும், வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றியாளர் பதக்கமும் வழங்கப்பட்டு அறிவியல் தின கொண்டாட்டம்
நிறைவு பெற்றது.