தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் அண்ணாவை பேரறிஞர் அண்ணா என்று, தந்தை பெரியாரை ஐயா என்று மக்கள் உணர்வுபூர்வமாக அழைத்தனர்.

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழகத்தை கட்டி போட்ட வரலாறு உண்டு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று எல்லோரும் அன்புடன் அழைத்தனர். அது இயற்கையாகவே அமைந்தது முதல்வர் மு க ஸ்டாலின் அவருடைய தந்தையை வேண்டுமென்றால் அப்பா என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு க ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை

திமுக எப்போதும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது

அதிமுகவில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது என்றார்

Share this to your Friends