துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில், ‘தியான் ஹெல்த் எஜூகேஷன்’ என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்புக்கான தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளராக கிருஷ்ணபிரியா. இங்கு படித்து வந்த தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா, நயினாம்பட்டியை சேர்ந்த பட்டியலின மாணவி மாலா வினோதினி(20) படித்து வந்தார்.

அங்கு மாணவி மாலா வினோதினிக்கும், சக மாணவி ஒருவருக்கும் நடந்த பிரச்னை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், சக மாணவியை மாலா வினோதினி தாக்கியதாக கூறப்படுகிறது.‌

இந்த பிரச்னையை விசாரித்த கண்காணிப்பாளர் கிருஷ்ணபிரியா மாலா வினோதினியை கன்னத்தில் அறைந்து, சக மாணவியின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்தார் என்று கூறப்படுகிறது

மேலும், அவர் ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்தை மாலா வினோதினியிடம் வாங்கிக் கொண்டு ரூ. ஒரு லட்சம் பணம் கொடுத்தால்தான் பள்ளி, கல்லுாரி சான்றிதழ்களை கொடுப்பேன் என்று கிருஷ்ணபிரியா மிரட்டி இருக்கிறார்.
இதுகுறித்து, மாலா வினோதினி கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது கோவில்பட்டி பயணியர் விடுதியில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், மாவட்ட வருவாய் அலுவலர் ., ரவிச்சந்திரன், துாத்துக்குடி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பிரியதர்ஷினி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பென்னட் ஆசீர், வன்கொடுமை தடுப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., ஜமால், கோவில்பட்டி போலீஸ் டி.எஸ்.பி., ஜெகநாதன், கோவில்பட்டி ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் ராஜ்குமார், தாசில்தார் சரவணப்பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மருத்துவ சான்றிதழ் படிப்பு கல்வி நிறுவனத்தில் 4 மாணவிகள் மட்டுமே படிப்பதாகவும், கோவில்பட்டியில் கல்வி நிறுவனம் நடத்த மருத்துவத்துறையில் அனுமதி பெறாமலும் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதில், படிக்கும் 4 மாணவிகளையும் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படும் மருத்துவக் கல்வி நிறுவனத்தில் படிக்க நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

Share this to your Friends