பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் ……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாம் கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமையில் நடைப்பெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் மில்டன்ராஜ் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம், சுப்ரமணியன், முருகேசன், முத்துச்சாமி, அன்புசெழியன் ,பெரியசாமி,கனகசபை ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.மேலும் ஸ்ரீ முத்து முனீஸ்வரர் ஆலயத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் தென்கன்றுகள் நட்டனர்.
இம்முகாமில் கல்லூரி பேராசிரியர் முருகவேனி, எழிலரசி, இலக்கியா, ரூபிலா, வித்யா,குணேஷ்வரி, ஜமிர்பாட்சா,மணிவண்ணன், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.