தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர்,சமூக நீதி கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா பங்கேற்பு கோவையில் சமூக நீதி கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் கூட்டமைப்பி்ன் தலைவர் இராம வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது..
இதில் பொது செயலாளர் டாக்டர் ஜி.எம்.முகம்மது ரபீக்,பொருளாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர்,சமூக நீதி கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா கலந்து கொண்டு பேசினார்..
அப்போது பேசிய அவர்,தமிழகத்தில் சமூக நீதி, அனைவருக்கும் நியாயமான வாய்ப்புகள் மற்றும் சமத்துவத்தை உறுதிசெய்து, பொருளாதார, கல்வி, மற்றும் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வகையில் தமிழக முதல்வர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறினார்..
கூட்டத்தில் சமூக நீதி காக்க பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் சமூகத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு கல்வி உதவி தொகை, வழங்குவது,
அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை சமூகம் சார்ந்து அனைத்து பகுதிகளிலும் தாலூகா வாரியாக கொண்டு செல்வதற்கு பிரதிநிதிகளை நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டது..
குறிப்பாக சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் பொது வெளியில் மக்களின் ஒற்றுமையை சீர்கெடுக்கும் விதமாக பேசினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
கூட்டத்தில் சமூக நீதி கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சேலம் பாலு, உமர் கத்தாப்,கருப்புசாமி,வசந்தி,சுரேஷ் மார்டின்,பிரமீளா,சிங்கை செந்தில் குமார்,தமிழ்செல்வன்,கலையரசி உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்..