மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரே ஸ்வரர் திருக்கோ விலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.


திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை யுடன் தினமும்காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் எழுந்தருளி உலா வந்தனர்.இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா கோயிலில் உள்ள அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் வெகு விமர்சையாக நடைபெற் றது.

முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தரு ளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ராயர் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டு ராயர் கிரீடம் அம்மனுக்கு சாத்தப்பட்டு, திருமலை நாயக்கர் செங்கோல் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.


மீனாட்சியம்மன் பட்டா பிஷேகத்தை தொட ர்ந்து அம்மனின் பிரதிநி தியாக இருந்து அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்ற அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ரா சன் மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனி டம் செங்கோலை சமர்ப் பித்தார். முன்னதாக கோவில் கணக்குப்பிள்ளையிடம் தங்க எழுது கோல் வழங்கப்பட்டது


பட்டாபிஷேகம் நடைபெற்ற நாளான இன்று துவங்கி ஆடி மாதம் வரை நான்கு மாதங்கள் மதுரையில் அன்னைமீனாட்சியின் ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம்.
விழாவின் தொடர்ச்சி யாக மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில் திக்கு விஜயம் இன்றும், விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி களான மீனாட்சி சுந்தரே ஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை 8 ம்தேதியும், 09 ம் தேதி மாசி வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *