திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் திமு தனியரசு தலைமையில் நடைபெற்றது கூட்டம் முடிந்தபின் அதிமுக மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது
இன்றைய கூட்டத்தில் வருவாய் மூல தன நிதியில் ஏராளமான பணிகள் செய்ய தீர்மானங்கள் வந்துள்ளன ஆனால் அனைத்து வார்டுகளிலும் பணிகள் உள்ளன ஏழாவது வார்டில் மட்டும் எந்த பணியும் இல்லை ஏனென்றால் ஏழாவது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த நான் இருப்பதால் எனது வார்டை புறக்கணிக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறேன் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படவில்லை
ரோடுகள் அனைத்தும் பழுதாக உள்ளது குடிநீர் சரியாக வருவதில்லை கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையில் பழுது ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக அது சீர் செய்யப்படவில்லை இந்த அரசு மக்களை பின்னோக்கி தான் இழுக்கின்றனர் பட்டா கொடுப்பேன் என கூறுகிறார்கள்
இதில் 7வது வார்டுக்கு எத்தனை பட்டாக்கள் என கூட்டத்தில் நான் கேட்டேன் ஆனால் அதற்கு பதில் இல்லை எனது வார்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதை ஆதாரத்துடன் நாங்கள் நிரூபித்தோம் ஆனால் தற்போது அது மருத்துவக் கழிவு இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையை பெறுகிறார்கள் தனி நபருக்காக அரசு இந்த செயலை செய்கிறது
ஏழாவது வார்டில் குடிநீர் இணைப்புக்கு ரூபாய் 10,000 பணம் வாங்கிக் கொண்டு தனிநபர்கள் இணைப்பு கொடுக்கிறார்கள் இதற்கு மண்டல குழு தலைவர் பெயரை பயன்படுத்துகிறார்கள் அதிமுக ஆட்சியில் ரூ100 க்கு இணைப்பு வழங்கப்பட்டது ஆனால் அதை இப்போது நிறுத்தி வைத்துக் கொண்டு பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கினார்கள்
இதை முறைப்படுத்தி குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் இணைப்புகள் வழங்க வேண்டும் இந்த அரசு செயலுக்கு எல்லாம் இன்னும் ஓராண்டில் பொதுமக்கள் தக்க பதில் தருவார்கள் என கூறினார்