பரமத்தி வேலூர் வார சந்தைகளில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் வசூல் செய்யும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளம் விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் இளம் விவசாயிகள் சங்கம் சார்பில் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இளம் விவசாயிகள் சங்க தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாடுகளின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி கண்டன உரையாற்றினார் .
ஞாயிற்றுக்கிழமைவார சந்தை தினசரி சந்தைகளில் விவசாயிகளின் விளை பொருட்கள் அதாவது விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு ரூபாய் 50 லிருந்து 100 ரூபாய் என அதிகப்படியான முறைகேடாக அதிக சுங்க வரிகட்டணத்தை பேரூராட்சி நிர்வாகம் வசூல் செய்து வருகிறது அதே போல் தினசரி செயல்படும் வாழைக்காய் மார்க்கெட்டில் ஒரு வாழைத்தாருக்கு 3 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதை மீறி ஒரு தாருக்கு 5ரூபாய் கட்டணம் வசூல் செய்து கொண்டிருக்கின்றனர். முறையான ரசீது தருவதில்லை.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இதே நிலைதான் நீடிக்கின்றது உடனடியாக தமிழக முதல்வர் கவனத்திற்கு பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் வாயிலாக தெரியப்படுத்துகிறோம். எங்களது இந்த கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து இந்த சுங்கவரி கட்டணத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
மேலும் இந்த சிறப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து தமிழக அரசே தமிழக அரசே விவசாயிகளை வஞ்சிக்காதே முறைகேடாக வசூல் செய்யும் சுங்க கட்டணத்தை நிரந்தரமாக நீக்கு என கண்டன கோஷங்களை எழுப்பினர்.