குண்டடம் பகுதியில் 20,000 மதிப்புள்ள ஆட்டை பைக்கில் திருடி சென்ற கள்ளக்காதலர்களை போலீசார் சிசி டி.வி காட்சியை வைத்து கைது செய்தனர்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம்
செம்ம பாளையத்தை சேர்ந்த வெங்கடசாமி விவசாயி.இவர் வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார்.

ஆடுகளை தாராபுரம்- கொடுவாய் புறவழிச்சாலை நால்ரோடு பிரிவு அருகே விவசாயின் மேய்ச்சல் நிலத்தில் கொட்டகையில் கட்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அதன் பிறகு ஆடுகளை மேய்ச்சல் பகுதியில் விட்டுவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்று திரும்பி வந்தார். அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, 1,ஆடுகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

பின், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், ஒரு ஆண் ஒரு பெண் இருவரும் சேர்ந்து பைக்கில் வந்து ஆட்டை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து வெங்குடுசாமி அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிந்து ஆடுகளைத் திருடிய நபர்களைப தேடி வந்தனர்.
இந்த நிலையில்

பழனியை சேர்ந்த கணேசன் என்பவரும் பல்லடத்தை சேர்ந்த சித்ரா என்பவரும் ஆட்டை திருடியது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் திருப்பூர் மங்கலம் பகுதியில் வைத்து கைது செய்து குண்டடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் அங்கே இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் அதன் பிறகு தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர் ஆட்டை நீதிபதி முன்பு ஆட்டின் உரிமையாளரிடம் வழங்கப்பட்டது.

Share this to your Friends