திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி மற்றும் வீடுகளுக்கு நேரடியாக சென்று தமிழ்நாடு உழவர் பெரிய இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வேணு.பாஸ்கர் தலைமையில் அழைப்பிதழ்களை வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் பழம் வைத்து வழங்கினர்.
வருகின்ற பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மகாமகத்திற்கு பெயர் பெற்ற கும்பகோணம் மாநகரில் நடைபெறும் வன்னியர் சங்கம் நடத்தும் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு அழைப்பிதழ்களை வலங்கைமான் கடைவீதி மற்றும் வலங்கைமான் ஒன்றியத்தில் பெரம்பர்கோவில், கண்டியூர், ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் பொறுப்பாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அழைப்பிதழ்களை வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் பழம் வைத்து வழங்கினர்.
இந்த நிகழ்வில் தமிழ் நாடு உலவர் பேரியகத்தின் மாவட்ட செயலாளர் உலகநாதன் ,பாமக மாவட்ட துணைத் தலைவர் சண்முகவேல் , உழவர் பேரியக்கத்தின் மாவட்ட துணை செயலாளர்கள் சண்முகம், சத்யா,
பாமக ஒன்றிய செயலாளர் அப்பு, பாமகமாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து
மற்றும் பாமக வன்னியர் சங்கம் உழவர் பேரியக்கம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அழைப்பு விடுத்தனர்.