துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாழ்வாதார கட்டிட அரங்கில் நேற்று 18/02/2025 அன்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2009எ சிறப்பம்சங்கள் குறித்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமை துறையூர் வட்ட வழங்கல் அலுவலர் முத்து தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.வருவாய் ஆய்வாளர் லட்சுமணன், வாழ்வாதார இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் திருச்சி தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் மனித விடியல் மோகன் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு பற்றி பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் நுகர்வோர் என்பவர் யார், நுகர்வோர்களுக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது பற்றி பயிற்சி அளித்தார்.

நுகர்வோரின் நலன்களை சிறப்பாகப் பாதுகாப்பதற்கும், நுகர்வோர் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்வதற்கும், மத்திய அரசு 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது, அதன் பிறகு, அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் விதிகளின்படி,1.மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்தில் – 50 லட்சம் வரையிலான புகாரும்,2. மாநில நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்தில் – 50 லட்சம் முதல் 2 கோடி வரையிலான புகாரும்,3.தேசிய நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்தில் – 2 கோடிக்கு மேலும் புகார் அளிக்க வழக்கு தொடரலாம். எனவே நாம் வாங்கும் பொருள்களுக்கு உரிய ரசீதுகளை பத்திரமாக பாதுகாத்து வைத்து கொண்டு நாம் வாங்கும் பொருள்கள் தரமற்றதாக இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது தைரியமாக புகார் அளித்து தீர்வு காணலாம்.இவ்வாறு பயிற்சி அளித்தார்.

Share this to your Friends