செங்குன்றம் செய்தியாளர்

மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான 3200 சதுர அடி கொண்ட இடத்தில் தேநீர் கடை, மதுபானங்களை கட்டி அதனை வாடகைக்கு விட்டு அனுபவித்து வந்திருந்தார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மாதவரம் மாநகராட்சி அதிகாரிகள் கட்டப்பட்ட கடைகளுக்கு முறையான அனுமதி பெறாத காரணத்தினால் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இது பற்றி நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் அதனை இடித்து அகற்ற உத்தரவிட்டது .

அதன்படி மாதவரம் மாநகராட்சி அதிகாரி திருமுருகன் உத்தரவின் பேரில் பொறியாளர்கள் கார்த்திகேயன் ,முத்தமிழ் உதவி செயற்பொறியாளர்கள் சரவணகுமார் ,ஆனந்தராவ், ஜெயலக்ஷ்மி ,குமார் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டிடத்தை இடித்து
தரைமட்டம் ஆக்கினார். அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க புழல் சரக உதவி ஆணையாளர் சகாதேவன் தலைமையில் மாதவரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share this to your Friends