பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்அதிரடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட மைய சமையற் கூடத்தில் தயாராகும் காலை உணவின் தரம் மற்றும் எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அடுத்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட கம்பன் நகர், டயானா நகர் பகுதிகளில் வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, தரம் பிரித்து சேகரம் செய்யும் பணி முறையாக நடைபெறுகிறதா என ஆய்வு நேரில் செய்தார்.மேலும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த தினசரி காய்கனி சந்தையின் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டார், இவ்விடத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.248 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

மேலும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 372 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தங்கள், உணவகம்,கழிவறை கட்டடங்களின் கட்டுமான பணிகள் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளின் போது துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்

Share this to your Friends