திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது.
இதுகுறித்து தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவித்ததாவது
திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் அதற்கு அடுத்தபடியாக தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் இந்த கண்ணாடி மாளிகை அறை உள்ளது.
திருவிழா நேரங்கள் மற்றும் உற்சவ காலங்களில் பெருமாளும், தாயாரும் இந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என தெரிவித்தார்.