அமெரிக்காவில் இருந்து கோவை வந்த 324 சி மாவட்ட வருங்கால கவர்னர் ராஜசேகர் அவர்களுக்கு மண்டல தலைவர்கள் செந்தில் குமார்,வெங்கடகிருஷ்ணன் தலைமையில் உற்சக வரவேற்பு

அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கத்தில் கலந்து கொண்டு கோவை திரும்பிய 324 சி மாவட்ட 2025-26 ஆண்டு வருங்கால ஆளுநர் ராஜசேகர் அவர்களுக்கு 324 சி நிர்வாகிகள் சார்பாக கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக,, பசிப்பிணி போக்குவது, குழந்தைகள் புற்றுநோய்க்கான இலவச சிகிச்சை, நீரிழிவு நோய்க்கான டயாலிசிஸ் இலவச சிகிச்சை,கல்வி உதவி தொகை வழங்குவது,கண்ணொளி திட்டம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,,இளைஞர் நலன் போன்றவற்றில் விழிப்புணர்வு மற்றும் சமூக நல செயல்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்..

இந்நிலையில் லயன்ஸ் கிளப் 324 சி மாவட்டம் புதிய ஆளுநராக தற்போதைய , முதலாம் துணை ஆளுநர் ராஜசேகர் பதவி ஏற்க உள்ளார்.

2025-26 ஆம் ஆண்டு கவர்னராக பதவி ஏற்பதற்கு முன்பாக, அமெரிக்காவில் நடைபெற்ற லயன்ஸ் மாவட்ட ஆளுநருக்கான தலைமை பண்பு பயிலரங்கத்தில் கலந்து கொள்ள கோவையில் இருந்து கடந்த மாதம் சென்றிருந்தார்.உலகம் முழுவதும் இருந்து லயன்ஸ் கவர்னர்கள் கலந்து கொண்ட பயிலரங்கத்தை நிறைவு செய்து கோவை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில், 324 சி மாவட்ட லயன்ஸ் மண்டல தலைவர்கள் செந்தில் குமார் மற்றும் வெங்கட கிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதே போல பயிலரங்கத்தை நிறைவு செய்து திரும்பிய 324 D வருங்கால ஆளுனர் தினகரன் அவர்களுக்கும் வரவேற்பு வழங்கப்பட்டது..

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வருங்கால கவர்னர் ராஜசேகர், பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த பயலரங்கத்தில் கலந்து கொண்டதாகவும்,
இளைய சமுதாயத்தினருக்கு போதை பொருட்களின் தீமைகள் குறித்து அதிக விழப்புணர்வு தேவைப்படுவதாக கூறிய அவர்,தாம், இதில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்..

விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் 324 சி கிளப் மற்றும் கிளை அமைப்பு நிர்வாகிகள் 324 சி மாவட்ட முதல் துணை ஆளுனர் செல்வராஜ்,ஜி.ஏ.டி.ஒருங்கிணைப்பாளர் சூரி நந்தகோபால்,பி.டி.ஜி.கருணாநிதி, ஜி.எல்.டி.ரவிசங்கர் ,வட்டார தலைவர் டாக்டர் கர்ணன்,மற்றும் ஆனந்தகுமாரி,
வெங்கடேஷ்,முத்துவேல்,ராஜா சுந்தரம்,கனகராஜ்,ஈஸ்வரன்,அசோகா உட்பட பலர் கலந்து கொண்டனர்…

Share this to your Friends