காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
காங்கயத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது அதில் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 174 கிலோ எடையுள்ள 8 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர் இதில் குறைந்தபட்ச விலையாக ரூ. 95.99 க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 135 க்கும் பருப்புகள் ஏலம் எடுக்கப்பட்டது.
மொத்தம் 20 ஆயிரத்து 622 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது