மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தனியார் அலுவலகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து புலனாய் பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பாக விழிப்புணர்வு நிகழ்வு வடக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையாளர் விஸ்வாஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி தலைமையில் நடைபெற்றது .

இதில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர்கள் சீனிவாசன், சத்தியமூர்த்தி போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் சுடலைமுத்து, சுசிலா மற்றும் போலீஸார்கள் முன்னிலையில், மாதவரம் சி எம் டி ஏ லாரி நிறுத்த ஓட்டுநர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரையை அதிகாரிகள் துவக்கி வைத்தனர்.

நிகழ்வில் குறிப்பாக சாலை விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் வருவோர் பலர் லாரியில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது ஸஇதனை தவிர்க்க கவனத்துடன் ஓட்டுநர்களை வாகனத்தை இருக்குமாறும் குடிபோதையில் இயக்க வேண்டாம் எனவும் சாலை விதிகளை மதித்து நடக்கவும், தூக்க கலக்கத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டாம் எனவும் மற்றும் உடல்நிலை சம்பந்தப்பட்ட பார்வை குறைபாடுகள் பற்றி விளக்கமாக கூறி அதனை காணொளி காட்சி மூலம் எடுத்துரைத்தனர்.

இதில் லாரி ஓட்டுநர் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயக்குமார் கூறும் போது, ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய நிறுவனங்களில் இருந்து லாரிகளில் ஓவர் லோடு ஏற்றும் போது போலீசாரின் கெடுபடியால் அபராத கட்டணம் ஓட்டுநர்களுக்கு விதிக்கப்படுகிறது.
அதிகாரிகள் அந்த அபராதத்தை நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டும் என கோரிக்கை வைத்தார் இதில் ஏராளமான ஓட்டுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this to your Friends