செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கடம்பாடி ஊராட்சியில்
பாரத ஜனதா கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட துணை தலைவர் ஜானகிராமன், தலைமையில் நடைபெற்றது,
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார், கலந்து கொண்டு பாஜக கொடியை ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி பம்ப் ஆப்ரேட்டருக்கு டார்ச் லைட், போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்,
அதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.