விருத்தாசலம்

தமிழ்நாடு முதல்வரின் கடலூர் மாவட்ட வருகையை முன்னிட்டு விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் சி. வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது .

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வருகை புரிவதை முன்னிட்டு விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் விருத்தாசலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர் சி.வெ.கணேசன்,”கடலூர் மாவட்டதிற்க்கு அரசு நலத்திட்ட உதவிகள், மற்றும் வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’’ எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.


அதுசமயம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக ஒன்றிய, நகர உள்ளிட்ட திமுக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்” என பேசினார்.

இதில் விருத்தாசலம் சட்டமன்ற திமுக தேர்தல் பொறுப்பாளர் சுபா.சந்திரசேகர், விருத்தாசலம் நகரமன்ற தலைவர் டாக்டர்.சங்கவி முருகதாஸ் நகரச் செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends