தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது.

மாவட்டத்துணைச் செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசித்ரா மற்றும் அருள்தாஸ் முன்னிலை வைத்தனர். மாவட்டப்பொருளாளர் எமிமால் ஞானசெல்வி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலச்செயலாளர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றி
னார். மாவட்டச் செயலாளர் சீனிவாசன் கூட்டப்பொருள் குறித்து விளக்கிப் பேசினர். மாவட்டத் துணைத் தலைவர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் வட்டார நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,
பிப்ரவரி 25 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதி கான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை –
முதுகலை ஆசிரியர் களுக்கு ஊதிய முரண்பாட்டை கலைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 90 சதவீதத்திற்கும் மேலான ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினை பறிக்கும் அரசாணை 243 ரத்து செய்தல், காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்குதல், 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்குதல்,

சிறப்பு ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறுகின்ற எம்.ஆர்.பி செவிலியர், சத்துணவு ஊழியர், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்பும்போது அவுட்சோசிங் முறையினை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் நிரப்புதல், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை பகுதியில் நடைபெறும் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 1,000 பெண்ணாசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அவ்வாறு கலந்து கொள்வதற் காக ஆசிரியர் சந்திப்பு இயக்கங்களை எதிர் வரும் பிப்ரவரி18 ம் தேதி முதல் 21 தேதி முடிய அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வட்டாரங்களின் நிர்வாகிகளை இணைத்துக் கொண்டு மதுரை மாவட்டத்திலுள்ள 15 ஒன்றியங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share this to your Friends