V. பார்த்த சாரதி செய்தியாளர் விழுப்புரம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி யை சேர்ந்த தமிழ் ஒளி என்பவரது மகன் சரண், 23: புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் பி டி எஸ் ., பல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி அன்று புவனகிரியிலிருந்து சிதம்பரத்திற்கு தந்தை தமிழ் ஒளியுடன் பஸ்ஸில் பயணம் செய்த போது எதிர்பாராத விதமாக பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி மூளை சாவு அடைந்தார்.
அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் தமிழ் ஒளி , லீலா ஆகியோரின் முடிவுப்படி சரண் உடல் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது இதையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் ரமாதேவி தலைமையில் ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் , டாக்டர் அருண் சுந்தர்,டாக்டர் மதுவர்தனன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர்சரண் உடலில் இருந்து இருதயம், கிட்னி ,கண்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்தனர் .
அவரது உடல் உறுப்புகள் சென்னை தனியார் மருத்துவமனையில் தயாராக உள்ள நோயாளிக்கு வழங்க உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
சரண் தானம் செய்த உடல் உறுப்புகள் மூலம் விடியல் ஆப்பிள் பதிவு செய்திருந்த பயனாளிகள் ஆறு பேர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இறுதிச் சடங்குகாகசரண் உடலை அவரது தந்தை தமிழ் ஒளியிடம் உடலை டாக்டர்கள் ஒப்படைத்தனர்.
இறந்த பின்பும் தனது மகனின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்று நினைத்த பெற்றோர்களுக்கு டாக்டர்கள் ,சமூக ஆர்வலர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.